Sunday, July 17, 2011

கிரிக்கெட் பிதற்றல்கள்: கிரிக்கெட் கற்றுக் கொள்ளலாம் வாருங்கள் - 5



Thursday, June 16, 2011

'இலங்கையின் கொலைக்களம்' : 'வீடியோ எடுத்து என்ன செய்ய போகிறீர்கள்'?


கண்ணீரை..........................

.........'இலங்கையின் கொலைக்களம்' : 'வீடியோ எடுத்து என்ன செய்ய போகிறீர்கள்'?........
Add caption

இலங்கையின் கொலைக்களம் (Sri Lanka's Killing Field) எனும் ஆவணத்தொகுப்பு நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டது.



இளகிய மனம் படைத்தோர், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், சிறார்கள் பார்வையிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட போதும்,  பிரித்தானிய மக்கள் பெரும்பாலானோரால் இவ்வீடியோ தொகுப்பு பார்வையிடப்படது.

இவ் ஆவணப்படத்தை தொகுத்து இயக்கிய இயக்குனர் Callum Macrae, குறித்த வீடியோ தொகுப்பு சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்படுவதற்கு சற்று முன்னதாக, கார்டியன் இணையத்தளத்தில் கட்டுரை ஒன்றை பதிவு செய்திருந்தார்.

எனது ஆவணப்படம் இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டு சுடரை பிரகாசமாக தூண்டிவிடும் என நம்புகிறேன் என இக்கட்டுரையில் தெரிவித்த அவர், மற்றுமொரு முக்கிய விடயமொன்றையும் இவ்வாறு கூறுகிறார்.

'இறுதிச்சமரின் இறுதி வினாடிகளில், சிறிலங்கா அரச படைகளின் விமான குண்டுத் தாக்குதல்களில் தப்பவழியின்றி சிறிய பங்கரில் (நில வெட்டுக்களில்) பச்சிளம் குழந்தையுடன் பதுங்கும் பெண் ஒருவர், 'இதை வீடியோவை வைத்து என்ன செய்ய போகிறீர்கள். அவர்கள் எல்லோரையும் கொல்கிறார்கள். நீங்களாவது பங்கருக்குள் வாருங்கள்!' என அங்கு நடப்பதை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் நபரை பார்த்து கதறும் ஒரு காட்சி ஒன்று இந்த ஆவண தொகுப்பில் அடங்கியிருக்கும்.

இறுதியில் அந்த பெண் கதறியபடிதான் நடந்தது. அனைவரையும் கொன்றார்கள்.  ஆனால் மறுமுனையில் இன்னுமொன்றும் நடந்து கொண்டிருந்தது. ஒரு ஊடகவியலாளர், நடந்ததை எல்லாம் தொடர்ந்து படம்பிடித்துக் கொண்டிருந்துள்ளார்'.

இவை உடனுக்குடன், இணையம் மூலம் வெளி உலக தொடர்புக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அந்த பெண்மணி கேட்ட கேள்வி மீண்டும் இப்போது எழுகிறது. இந்த வீடியோக்களை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்? எனக்குள் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த கதறல் குரல் தான் இந்த ஆவணப்படத்தை செய்ய தூண்டியது.

அந்த பெண்ணின் கேள்விக்கு பதில் இது தான் : 'Sri Lanka's Killing Field'

.நா மற்றும் ஆளுமை சக்தியுடைய சர்வதேச சமூகமே புரிந்துகொள்ளுங்கள்!

இது நவீன ஊடக யுகம். ஒரு நாடு தன் சொந்த மக்களையே படுகொலை செய்வதையும், போர்க்குற்றம் புரிவதையும், மனித உரிமைகளுக்கு எதிராக நடந்துகொள்வதையும், இனி இரகசியமாக உங்களால் பாதுகாக்க முடியாது.

புரிந்து கொள்ளுங்கள்!

இனியும் இப்படியான மனித கொடூரங்கள் உலகில் அரங்கேற கூடாது!

'எமக்கு உணவு, மருந்து ஒன்றும் வேண்டாம்; எம்மால் எம்மை பார்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் எங்களுடன் தொடர்ந்து இருங்கள். சர்வதேசத்தின் சாட்சியமாக இருங்கள்' என இறுதி யுத்தம் தொடங்கிய இடட்தில், .நா கிளை காரியாலயம் ஒன்றின் முன் தமிழ் மக்கள் கதறிய போது, செவிமடுக்காது அங்கிருந்து வெளியேறினீர்கள்'

அதன் பின் அந்த மக்களில் பெரும்பாலோனோர் உயிருடன் இல்லை. அம்மக்களிடம் ஒரு முறை தோற்றுவிட்டீர்கள். இப்போது அந்த கொலைகளுக்கு நீதி கேட்டு, உயிருடன் எஞ்சியவர்கள் நிற்கிறார்கள்.  இப்போது என்ன செய்ய போகிறீர்கள்?

இப்போது நீங்கள் மீண்டும் தோற்பீர்களானால், கொடுங்கோல் ஆட்சி புரியும் நாடுகளின் அரசுகளுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்பிறேன். இனி எந்தவித தயக்கமின்றி, தண்டனை கிடைக்கும் என்ற பயமின்றி, உங்களது நாட்டு சொந்த மக்களையே நீங்கள் கொல்லலாம். ஏனெனில் முடிவில் நீங்கள் இலகுவாக தப்பித்து கொள்ளலாம்!

என்கிறார் Callum Macrae.

சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான குறித்த ஆவணப்படம், தற்போது சேனல் 4 இணையத்தளத்தின் '4oD' பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்திற்கு பின்னின்று உழைத்த சேனல் 4 ஊடகவியலாளர்களின் உழைப்புக்கு மரியாதை செலுத்தும் வகையிலும்,  தெளிவு, நேர்த்தியான பின்னணி இசை என்பவற்றை கருத்தில் கொண்டும், சேனல் 4 இணையத்தளத்தில் நேரடியாக சென்று இந்த ஆவணப்படத்தை பார்வையிடும் படி கோருகின்றோம்


நன்றி - http://www.4tamilmedia.com

அரசுப் பள்ளிக்கூடத்தில் மகளைச் சேர்த்த ஈரோடு கலெக்டர்


Collector Anandakumar
தனது மகளை அரசுப் பள்ளிக்கூடத்திற்குத் தானே அழைத்துப் போய் அங்கு 2வது வகுப்பில் சேர்த்து, சத்துணவும் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தி விட்டு வந்துள்ளார் ஒரு கலெக்டர். தமிழக அரசு ஊழியர்கள் வரலாற்றில் இது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

கால் காசு என்றாலும் அது கவர்ன்மென்ட் காசாக இருக்க வேண்டும் என்று பழமொழியாக கூறுவார்கள். ஆனால் அரசு வேலையை மட்டும் விரும்பும் பலரும், தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க ரொம்பவே தயங்குவார்கள். தனியார் பள்ளிக்கூடங்களில்தான், அதுவும் ஏகப்பட்ட கேபிடேஷன் பீஸ் கொடுத்து சேர்க்கத் துடிப்பார்கள்.

அரசுப் பள்ளிகளில் தரம் இருக்காது, பிள்ளைகள் கெட்டுப் போய் விடுவார்கள், சரியாக படிக்க மாட்டார்கள், சமூகத்தில் மரியாதை இருக்காது என்பது இவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் ஒரு மாவட்ட கலெக்டர் தனது பிள்ளையை சாதாரண ஒரு அரசுப் பள்ளியில் 2வது வகுப்பில் சேர்த்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

அவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார். இவர் நேற்று தனது மனைவி ஸ்ரீவித்யா, மகள் கோபிகா ஆகியோருடன் ஈரோடு, குமலன் குட்டை பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக் கூடத்திற்கு வந்தார். நேற்றுதான் விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிக்குள் அலைமோதிக் கொண்டிருந்தனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியை ராணி புதிய மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். ஈரோடு தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழி, மாணவர் சேர்க்கைப் பணியை பார்வையிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது கலெக்டர் அங்கு வந்ததால் அவர்களுக்கு குழப்பமானது.

என்னவோ ஏதோ என்று அவரை நோக்கி தலைமை ஆசிரியையும், தொடக்கக் கல்வி அதிகாரியும், ஆசிரியர்களும் விரைந்து வந்தனர். அப்போது அவர்களிடம் தனது மகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க வந்திருப்பதாக கலெக்டர் கூறவே அவர்களது குழப்பம் அதிர்ச்சியானது. பிறகுதான் அவர்கள் சுதாரித்து தலைமை ஆசிரியை அறைக்கு கலெக்டர் குடும்பத்தினரை அழைத்துச் சென்றனர்.

அங்கு தலைமை ஆசிரியை தனது இருக்கையில் கலெக்டரை அமரச் சொன்னார். அதை மறுத்து விட்ட கலெக்டர் பெற்றோர்கள் வந்து அமருவதற்காக போடப்பட்டிருந்த நீண்ட பெஞ்ச்சில் அமர்ந்தார்.

பிறகு தனது மகளை தமிழ் மீடியத்தில் 2வது வகுப்பில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அதை தலைமை ஆசிரியையும் கொடுத்தார். பின்னர் கோபிகாவை பள்ளியில் சேர்த்தனர்.

அதன் பின்னர் தனது மகள் சத்துணவு சாப்பிடவும், சீருடை அணியவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் கலெக்டர்.

பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்ட கோபிகா தனது வகுப்புக்குச் சென்று மற்ற பிள்ளைகளுடன் அமர்ந்து படிக்க ஆரம்பித்த காட்சி அனைவரையும் வியக்க வைத்தது.

கலெக்டர் வந்து தனது மகளை அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டு, சத்துணவும் சாப்பிட ஏற்பாடு செய்து விட்டுச் சென்ற சம்பவம் அந்தப் பள்ளிக்கூடத்தை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஈரோடு மாவட்டத்திற்குமே இது மிகப் பெரிய செய்தியாக அமைந்துள்ளது. ஏன் தமிழக மக்களுக்கும் இது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அலுவலகத்தில் சாதாரண அலுவலக உதவியாளர் வேலை பார்ப்பவர் கூட தனது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் பெரும் பணம் கொடுத்து சேர்க்கத் துடிக்கும் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவர் சாதாரண அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தது ஆச்சரியமாகவே உள்ளது.

ஆனால் கலெக்டர் ஆனந்தகுமாருக்கு இது பெரிய விஷயமாகவே இல்லை. தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்ததை அவர் விளம்பரப்படுத்தவும் விரும்பவில்லை. மாறாக இது எனது தனிப்பட்ட விஷயம் என்று மட்டும் அடக்கமாக அவர் கூறினார்.

தனது செயலின் மூலம் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் மறைமுகமாக ஒரு செய்தியை விட்டுச் சென்றுள்ளார் கலெக்டர் ஆனந்தக்குமார். அரசுப் பள்ளிகள் தரமானவையே, அங்கு படிக்க வைப்பதால் குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகி விடாது. அரசுப் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் அரசு ஊழியர்களாவது மதிப்பும், மரியாதையும்,அங்கீகாரமும் தர வேண்டும் என்பதே அது.

பாராட்டப்பட வேண்டியவர்தான் ஆனந்தக்குமார்.